என் சமயலரை பகுதியில் இன்று ஆரோக்கியமான இளநீர் ஹெர்பல் ரசம் செயல்முறையை பார்ப்போம்....
தேவையான பொருட்கள்:
இளநீர் - 1 கப்
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 1
மிளகு, சீரகம் - தலா 1 தேக்கரண்டி
தூதுவளை இலை,
துளசி இலை,
கற்பூரவள்ளி இலை,
கண்டந்திப்பிலி,
வெற்றிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை,
கருவேப்பிலை,
புளிக்கரைசல்,
கடுகு, நெய், உப்பு,
ரசப்பொடி, மஞ்சள் பொடி - தேவையான அளவு
செய்முறை:
தூதுவளை , துளசி, கற்பூரவள்ளி , கண்டந்திப்பிலி மற்றும் வெற்றிலையை
சுத்தம் செய்து, மிளகு, சீரகம் சேர்த்து அரைக்கவும். பாத்திரத்தில்,
புளிக்கரைசல் ஊற்றி, அரைத்த இலை விழுது, தக்காளி , மஞ்சள் பொடி,
ரசப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்தவுடன், ஒரு கப் இளநீர் ஊற்றி, நுரை வந்ததும் நெய்யில்
தாளித்த கடுகு, சீரகத்தை கொட்டவும். கொத்தமல்லி கருவேப்பிலை தூவி
அடுப்பை அணைக்கவும்.
ஆரோக்கியமான, "இள்நீர் ஹெர்பல் ரசம் ! " தயார். அனைத்து வயதினரும்
பருகலாம். சளி, இருமல், காய்ச்சல் அண்டாது.